கர்நாடக தேர்தல்: பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By SG Balan  |  First Published Apr 17, 2023, 6:43 PM IST

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இன்னும் ஷிமோகா மற்றும் மான்வி ஆகிய இரு தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மொத்தம் உள்ள் 224 தொகுதிகளில் இதுவரை 222 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

பாஜகவில் மூத்த தலைவராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். இந்நிலையில், ஜெகதீஷ் ஷெட்டரின் வசம் இருந்த ஹூப்ளி-தர்வாட் மத்தியத் தொகுதியில் மகேஷ் தெங்கிணகையை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

click me!