கண்ணு கெட்டு போயிடும்... 5ம் வகுப்பு வரை ஆன்லைன் கிளாஸ் கிடையாது.. முதல்வர் எடியூரப்பா அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 11, 2020, 3:21 PM IST
Highlights

பெற்றோர்கள் அளித்த புகார்களை அடுத்து கர்நாடகாவில் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பெற்றோர்கள் அளித்த புகார்களை அடுத்து கர்நாடகாவில் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஊரடங்கு காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல தனியார் பள்ளிகள் ஆன்லைனில், பாடங்களை நடத்த தொடங்கி விட்டன. ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், கர்நாடகாவில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை, ஆன்லைனில் பாடங்களை நடத்த தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

எனினும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம், பாடங்களை நடத்த தடையில்லை, என்றும் கூறியுள்ளார்.  ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சில காரணங்களை, கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

அதன்படி, ஆன்லைனில் படிப்பு என்பது பள்ளிகளுக்கு சென்று படிப்பதற்கு ஈடாகாது எனவும், ஆன்லைனில் பாடங்களை நடத்தி முடிப்பது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார். சிறு வயதில் இது போன்ற ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு ஆபத்தானது என்பதால் தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கான பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்தார். மேலும், மாணவர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் கிடைப்பது சிரமம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

click me!