கர்நாடக தேர்தல் முடிவு 2024 பொதுத் தேர்தலில் எந்தவித தாக்கமும் செலுத்தாது: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

By SG Balan  |  First Published May 20, 2023, 5:57 PM IST

2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2024 பொதுத்தேர்தலில் எந்தவிதமான தாக்கமும் செலுத்தாது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2024 இல் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் எந்த தாக்கமும் செலுத்தாது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். தென்னிந்தியாவில் கணிசமான செல்வாக்கு உள்ள ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் பாஜக அடைந்துள்ள படுதோல்வி குறித்து கேட்கப்பட்டதற்கு இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் முன்னேற விரும்புகிறார்கள் என்றும், கர்நாடக மாநிலத் தேர்தல் தோல்வியால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறையாது என்றும் அவர் கூறினார்.

Latest Videos

undefined

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை, அதற்கு முந்தைய 65 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நாடு எந்தப் பாதையில் செல்ல விரும்புகிறது, நாட்டு மக்கள் எந்த வழியில் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரியும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம், மத வேறுபாடின்றி ஒவ்வொரு இந்தியருக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறோம், அந்த பாதையில் நகர விரும்புகிறோம்" என அவர் கூறினார்.

ஏன் இந்த முறையும் கந்தீரவா மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார் சித்தராமையா? இதுதான் ரகசியம்!

2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவு முன்கூட்டியே தீர்மானம் ஆகிவிட்டதாவும் பிரதமர் மோடி நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வார் எனவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சமூக நல வாக்குறுதிகளை வெறும் இலவசங்கள் என்று விமர்சித்த ராஜீவ் சந்திரசேகர், இந்த வகையான போக்கு பொருளாதாரத்துக்கு மிகவும் ஆபத்தானது என்றார். குறிப்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையும் அவரது அரசாங்கமும் கோவிட் தொற்றுக்குப் பிறகு கர்நாடக பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பிய பிறகு, காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

"இதன் அர்த்தம், அடிப்படையில், கன்னடிகர்களின் வருங்கால சந்ததியினர்தான் இன்று காங்கிரஸ் அரசாங்கத்தால் வாங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். இது நிச்சயமாக மாநிலத்திற்கு நல்லதல்ல. எவருக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் இந்தக் கடனின் சுமையைச் சுமக்கும் மாநில இளைஞர்களுக்கு இது நிச்சயமாக நல்லதல்ல" என்று அவர் கூறினார்.

ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்ததில் மோடிக்கு விருப்பமில்லை : பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் விளக்கம்

click me!