ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை... கூடுதல் அமர்வுக்கு மாற்றம்... கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி!!

Published : Feb 09, 2022, 05:37 PM IST
ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை... கூடுதல் அமர்வுக்கு மாற்றம்... கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி!!

சுருக்கம்

ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றம் செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது. மேலும் கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றம் செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது. மேலும் கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது.  இதனிடையே, பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்சித் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!