அரசு ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்..’ மீண்டும் சம்பள உயர்வு… எப்போது அறிவிப்பு தெரியுமா ?

By Raghupati RFirst Published Feb 9, 2022, 12:39 PM IST
Highlights

மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த ஜனவரி மாதமே அகவிலைப்படி உயர்வு மற்றும் அடிப்படை சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு Fitment factor 2.57இல் இருந்து 3.68ஆக உயர்த்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து கேபினட் கூட்டத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களிடம் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைப்படி fitment factor உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 26000 ரூபாயாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படை சம்பளம் உயர்த்தால் மொத்த சம்பளமும் கணிசமாக உயரும்.

அடிப்படை சம்பளம் மட்டுமல்லாமல் அகவிலைப்படி உயர்வு குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூன் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. எனவே, விரைவில் அகவிலைப்படி பற்றிய அறிவிப்பையும் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!