காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் இன்று திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார்
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் இன்று திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ராஜஸ்தானைக் கடந்து ராகுல் காந்தி தற்போது ஹரியானாவில் நடந்து வருகிறார்.
இவுங்க அவுங்க இல்லீங்க! இந்திய போர் விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் பைலட் சானியா மிர்சா
ஹரியானாவில் தனது பயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி நாளை டெல்லி எல்லைக்குள் நுழைய உள்ளார். இந்நிலையில் ஹரியானாவில் இன்று நடந்த ராகுல் காந்தியின் நடைபயணத்தில் திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்று நடந்தார்.
ईश्वर-अल्लाह तेरो नाम... pic.twitter.com/fiLvSJVZBi
— Congress (@INCIndia)ராகுல் காந்தி ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் அனைவரும் கடிதம் எழுதி, அதில் டெல்லியில் நடக்கும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் அனைவரும் பங்கேற்க வாருங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து, திமுக சார்பில் கனிமொழி இன்று ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்றார்.
நாட்டில் கொரோனா பரவல் வராமல் தடுக்கும் வகையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தியவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டிருந்தார்.
களம்புகுந்தது கருடா படை ! அருணாச்சல்-சீனா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
இந்நிலையில் ராகுல் காந்தியின் பயணம் ஹரியானா மாநிலத்தைக் கடந்து டெல்லி நகருக்குள் நாளை நுழைகிறது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரும் இன்றுடன் ஒத்திவைக்கப்பட்டது