2024 தேர்தலில் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்.. அடித்துச் சொல்லும் முன்னாள் முதல்வர்

Published : Dec 31, 2022, 10:25 PM IST
2024 தேர்தலில் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்.. அடித்துச் சொல்லும் முன்னாள் முதல்வர்

சுருக்கம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார். - முன்னாள் முதல்வர் கமல்நாத்.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவும், காங்கிரசும் இப்போது பணிகளை தொடங்கிவிட்டனர். பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, ஜே.பி நட்டா என பாஜகவின் மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு பக்கம் ராகுல் காந்தி பாரத் ஜோடோ பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

இதுகுறித்து பேட்டியளித்த அவர், இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, அதிகாரத்துக்காக அரசியல் பணிகளைச் செய்யாமல் சாமானியர்களுக்காகவே செய்கிறார். 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாக மட்டுமல்லாமல், பிரதமர் வேட்பாளராகவும் ராகுல் காந்தி இருப்பார்.

பதவிக்காக ராகுல் அரசியல் செய்யவில்லை. நாட்டு மக்களுக்காக. யாரையும் ஆட்சியில் அமர்த்த அவர்களுக்கு உரிமை உண்டு. உலக வரலாற்றில் ராகுலைப் போல ஒரு பாதயாத்திரை நடந்ததில்லை. காந்தி குடும்பத்தைப் போல நாட்டிற்காக தியாகம் செய்த குடும்பம் வேறு இல்லை என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!