Karnataka Election : தனித்து போட்டி! அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்! கர்நாடகா தேர்தலில் பாஜகவின் வியூகம் எடுபடுமா?

By Raghupati RFirst Published Dec 31, 2022, 8:00 PM IST
Highlights

கர்நாடகா மாநிலத்தில் 2023 ஏப்ரல் மாதவாக்கில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. இதற்கு முன்பாகவே அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.

கர்நாடகா மாநிலத்தில் 2023 ஏப்ரல் மாதவாக்கில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜக சார்பில் கர்நாடகாவில் சங்கல்ப் என்ற யாத்திரையை நடத்த உள்ளது.

இதையும் படிங்க..DMK Vs BJP : கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? பாஜக தயார்.. முதல்வருக்கு சவால் விட்ட அண்ணாமலை

கர்நாடக மக்களிடம் அதரவை பெறவும், கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டத்தை அக்கட்சி கையில் எடுத்துள்ளது. பாஜக மாநில நிர்வாகத்திற்கும் தொடர்ந்து உட்கட்சிப் பூசல் நிலவி வரும் நிலையில் இந்த யாத்திரை ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வரப்போகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.  இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

அப்போது பேசிய அவர், ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி அமைக்கப் போவதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். கர்நாடகாவில் பாஜக தனித்துப் போட்டியிடும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடாகாவில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்.

காங்கிரஸைப் பொறுத்தவரை, அதிகாரத்தைப் பெறுவது ஊழல் செய்வதற்கான ஒரு வழியாகும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும். சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 6 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்துள்ளது என்று கூறினார் அமித்ஷா.

இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

click me!