தெலங்கானா தேர்தலில் விஜய் பாணி வியூகம்: கே.கவிதாவுடன் ரத்தன் பண்டிட் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?

Published : Aug 20, 2026, 04:45 PM ISTUpdated : Aug 20, 2026, 04:47 PM IST
K Kavitha Meets Astrologer Rattan Pandit

சுருக்கம்

K. Kavitha Meets Astrologer Rattan Pandit: பிரபல ஜோதிட ஆலோசகர் ரத்தன் பண்டிட் ‘தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சியின் தலைவர் கே.கவிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தெலங்கானா தேர்தலுக்கான வியூகமா? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

தெலங்கானா மாநிலத்தின் ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ (TRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கே.கவிதாவை, இந்தியாவின் முன்னணி ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசகரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் அரசியல் வாழ்க்கையையே மாற்றியவர் ரத்தன் பண்டிட்

துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற ரத்தன் பண்டிட், இந்திய அளவிலான அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ஆன்மீக மற்றும் ஜோதிட வழிகாட்டியாக திகழந்துள்ளார். வேத ஜோதிடம் மற்றும் எண்கணிதத் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட அனுபவம் கொண்டவர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆன்மீக ஆலோசகராக இருந்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

மேலும் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தி இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யின் வெற்றியை முன்கூட்டியே கணித்து வியக்க வைத்தவர் ரத்தன் பண்டிட். விஜய்யின் ஜாதக அமைப்பையும், கட்சியின் பெயரையும் துல்லியமாக பகுப்பாய்வு செய்து அவர் அளித்த கணிப்புகள் அனைத்தும் நிஜமாகி தவெகவை இன்று ஆட்சியில் அமர்த்தியுள்ளன.

இதையும் படிங்க: Aawin Milk Price: ஆவின் பால் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு?! தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக நடக்கும் சம்பவம்.! லிட்டருக்கு எவ்ளோ தெரியுமா?

கே.கவிதா - ரத்தன் பண்டிட் சந்திப்பு

இந்த நிலையில் தான் கே.கவிதாவை ரத்தன் பண்டிட் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கே.கவிதாவின் புதிய அரசியல் நகர்வுகளுக்கு வழிகாட்டும் பொருட்டு இந்தச் சந்திப்பு அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் விஜய்யின் ஜோதிட ஆலோசகராக மட்டுமின்றி அவருடைய தனிப்பட்ட ஆலோசகராகவும் விளங்கினார் ரத்தன் பண்டிட்.

சந்திப்பின் பின்னணி என்ன?

இது விஜய்க்கு பெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியையும் தேடிக் கொடுத்தது. ஆகவே தான் கே.கவிதாவும் விஜய்யின் பாணியில் ரத்தன் பண்டிட் ஆலோசனையின் பேரில் 2028 சட்டப்பேரை தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற ரத்தன் பண்டிட்டின் இந்த வழிகாட்டுதல், ஆலோசனை கவிதாவின் அரசியல் பயணத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தையும் புதிய உவேகத்தையும் தரும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

இதையும் படிங்க தமிழகத்தின் நீர்நிலைகளை காப்பாற்றுங்கள்; ரூ.1 லட்சம் கோடி செலவில் கடனையும் அடைக்கலாம்: சௌமியா அன்புமணி

விஜய் பாதையில் கே.கவிதா?

ஒட்டுமொத்தத்தில் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ரத்தன் பண்டிட், கே.கவிதா சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பா? இல்லை கவிதாவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் சந்திப்பா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Air Pollution : எல்லை தாண்டும் விஷக்காற்று! தமிழகம், கேரளாவுக்கு எச்சரிக்கை மணி!
September Crops: விவசாயிகளே கவலை வேண்டாம்! செப்டம்பரில் சாகுபடி செய்ய ஏற்ற 6 பயிர்கள்.. நல்ல வருமானம் பெறலாம்