
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-19 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி 640 டன் எடை கொண்டது.
ஏற்கனவே இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. முதன்முதலாக செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது.
இதுவரை வான்வெளி நீள்வட்டபாதையில் 41 இந்தியச் செயற்கைகோள்கள் சுற்றி வருகின்றன. இதில் 13 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களும் அடங்கும்.
முதல்முறையாக ஜிசாட்-19 செயற்கைக்கோளில் டிரான்ஸ்பாண்டர்கள் இல்லாமல் செல்கிறது.
இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கடந்த 12 ஆண்டுகால உழைப்பினால் கிடைத்த வெற்றி இது எனவும், இதனால் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம் எனவும் தெரிவித்தனர்.