ஜார்கண்ட் அருகே அதிகாலையில் ஏற்பட்ட ரயில் விபத்து.. விரைவு ரயில் தடம் புரண்டது.. யாருக்கு என்ன ஆனது?

By Raghupati R  |  First Published Jul 30, 2024, 8:52 AM IST

ஜாம்ஷெட்பூர் அருகே ஹவுரா-மும்பை விரைவு ரயில் பல பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.


ஜார்கண்ட்: மும்பை-ஹவுரா மெயிலின் 10 பெட்டிகள் ஜார்கண்டின் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ரயில் தடம் புரண்டதில் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதத்பூர் கோட்டத்தின் கீழ், ஜாம்ஷெட்பூரிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ள படபாம்பூ அருகே அதிகாலை 3.45 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில் அதிகாரிகள் தெரிவித்ததாவது, “மும்பை-ஹவுரா மெயிலின் 10 முதல் பன்னிரெண்டு பெட்டிகள் படபாம்பூ அருகே தடம் புரண்டது. விபத்தில் ஆறு பயணிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனே மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அவர்கள் இப்போது சிறந்த சிகிச்சைக்காக சக்ரதர்பூருக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்” என்று கூறினார்கள்.

Latest Videos

undefined

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

மேலும் சில அதிகாரிகள், செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் கர்சவான் தொகுதியில் உள்ள போடோபெடாவில் இருந்து இந்த ரயில் விபத்து ஏற்பட்டதாகவும், மும்பை-ஹவுரா மெயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. காயமடைந்தவர்களை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது," என்று தெரிவித்தனர்.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

click me!