nitish kumar:bihar:bjp:நிதிஷ் உடன் உறவு முறிவு: பாஜவுக்கு பின்னடைவா? NDAவிலிருந்து 3வது பெரிய கட்சியும் விலகல்

By Pothy Raj  |  First Published Aug 10, 2022, 11:48 AM IST

கடந்த 3 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 3 பெரிய கட்சிகள் விலகியுள்ளது. அந்தக் கட்சிக்கு பின்னடைத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


கடந்த 3 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 3 பெரிய கட்சிகள் விலகியுள்ளது. அந்தக் கட்சிக்கு பின்னடைத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

3 பெரிய கட்சிகள் விலகல்

Tap to resize

Latest Videos

முதலில் சிவசேனா கட்சியும், அதன்பின் விவசாயிகள் போராட்டத்தின் போது பஞ்சாப்பில் அகாலி தளம் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகின. தற்போது,நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனத தளம் கட்சியும் விலகியுள்ளது.

பிரதமருக்கு ரூ.467 கோடியில் வீடு.. அரிசிக்கு போட்ட GST-ஐ வேறு எப்படி செலவழிப்பது? சிபிஎம் நிர்வாகி விமர்சனம்!

பாஜக 2வது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்து 18 மாதங்களுக்குள் தங்கள் கூட்டணியிலிருந்த இரு மிகப்பெரிய கட்சிகளான சிவேசனா, அகாலி தளத்தை இழந்தது. இன்னும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் பீகாரின் மிகப்பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.

பீகாரில் மட்டும் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் கிடைக்கும் வெற்றி, தோல்வியும் மத்தியில் ஆட்சியில் அமர்வதைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் மனமாற்றம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஜார்ஜ் பெர்னான்டஸ் இருந்தபோது, 2014ம் ஆண்டு மக்களவைத்தேர்தல் நடந்தது. அப்போது என்டிஐ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். நரேந்திர மோடி மீது தனிப்பட்ட வெறுப்புணர்வில் இருந்த நிதஷ் குமார் அப்போது கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

பீகாரில் பாஜக-நிதிஷ் கூட்டணி உடையுமா? ஆர்ஜேடி-ஜேடியு ஆட்சியா?எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலா மகா கூட்டணியில் சேர்ந்த நிதிஷ் குமார் 2017ம் ஆண்டு அந்தக் கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்தார். 2020ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம், பாஜக சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆட்சி முடிந்த நிலையில் மீண்டும் பாஜக கூட்டணியைவிட்டு நிதிஷ் குமார் வெளியேறியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கூட்டணியிலிருந்து 2-வது முறையாக நிதிஷ் நடையைக் கட்டியுள்ளார். 

கிழக்கு இந்தியா பாஜகவுக்கு கைகொடுக்குமா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு வெளியேறிவிட்டதால், இனிமேல் பாஜகவுக்கு கிழக்கு இந்தியாவில் வெற்றி பெறுவது என்பது கடினமாக இருக்கும்.

பீகாரில் பாஜகவுக்கு இருக்கும் முகத்தைவிட, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்குத்தான் வாக்குவங்கி அதிகம். அதிலும் யாதவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர் வாக்கு லாலு கட்சிக்கு செல்லும். 

நிதிஷ் குமார் குருமி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கி முழுவதும் அவருக்குச் செல்லும். இதில் சிறுபான்மையினர் வாக்குகள் ஆர்ஜேடி, நிதிஷ் கட்சிக்கு செல்லும் என்பதால், பாஜக இனிவரும் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவது கடினம். ஏற்கெனவே மேற்கு வங்கம், ஒடிசாவில் பாஜக வெல்வது கடினமாகியுள்ள நிலையில் இப்போது பீகார் நிலையும் பாஜகவுக்கு மோசமாகியுள்ளது.

பிரதமர் மோடி-யின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரிப்பு: நிலத்தை தானமாக வழங்கிவிட்டார்

தென் மாநிலங்களில் முகவரி இல்லை

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளா, ஆந்திரா,தமிழகத்தில் இன்னும் பாஜக எழும்பவே இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்த 3 மாநிலங்களிலும் கடந்த 20 ஆண்டுகளில் பாஜகவால் பெரிதாக எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. 

இதனால் தென் மாநிலங்களிலும் பாஜகவுக்கு கடினமான பாதையே காத்திருக்கிறது. இதில் தெலங்கானாவில் டிஆர்ஸ் கட்சியும் பாஜகவுடன் மல்லுக்கு நிற்பதால், தெலங்கானாவிலும் பாஜகவுக்கு தனது முத்திரையை பதிப்பது கடினமாக இருக்கும்.

2 வாய்ப்புகள்தான்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறிவிட்டதால், இனிமேல் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புக்கு சாத்தியமுள்ள, அதேநேரம், அதிகமான எம்.பி.க்கள் மாநிலங்கள் இரண்டு மட்டும்தான். மகாராஷ்டிரா, உ.பி. மட்டும்தான்.இங்கு மட்டும் 128எம்.பி.க்கள் உள்ளனர். ஆதலால், இரு மாநிலங்களின் ஒட்டுமொத்த இடங்களையும் கைப்பற்ற பாஜக தீவிரமாக யோசிக்கும்.

மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்... துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்பு!!

ஏற்கெனவே பாஜகவால் அடிப்பட்ட புலியாக இருக்கும் சிவசேனா, நிச்சயம் 2024ம் ஆண்டு தேர்தலில் தனது முழு சக்தியையும் வெளிப்படுத்தி பணியாற்றும். இதனால் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு வெற்றியும் கடினமாகத்தான் இருக்கும். இது தவிர தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் தங்கள் பங்கிற்கு இடங்களைப் பிடிக்கும்.

கடினமான போட்டியாளர்கள்

தமிழகம், மேற்கு வங்கம், பீகாரில் பாஜக ஆட்சியில் இல்லை. இந்த 3 மாநிலங்களிலும் 122 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பாஜகவுக்கு வரும் காலங்களில் வெற்றி சதவீதம் என்பது 25 சதவீதத்துக்கும் குறைவுதான். கடந்த தேர்தலில் மே.வங்கத்தில் பாஜக 18 இடங்களையும், பீகாரில் 17 இடங்களையும் வென்றது. ஆனால், அதேபோன்ற சூழல் அடுத்தத் தேர்தலில் நடக்குமா என்பது தெரியாது.

டெல்லியில் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு… பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்!!

பாஜகவுக்கு உதவாத தென் மண்டலம்

கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக மத்திய மண்டலத்திலும், வடக்கு மண்டலத்திலும் வலுவாகவே இருந்து வருகிறது. ஆனால், தென் மாநிலங்கள், கிழக்கு மாநிலங்களில் மட்டும் பாஜகவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பலமுறை தனது தடத்தை பாஜக பதிக்க முயன்றபோதிலும் ஒவ்வொரு முறையும் அதற்கு பின்னடைவுதான் ஏற்படுகிறது.

சென்ட்டர் ஃபார் டெவலிப்பிங் சொசைட்டீஸ் பேராசிரியர் சஞ்சய் குமார் கூறுகையில் “ பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுக்கு சவுகரியக் குறைவு ஏற்படுவதால்தான் ஒவ்வொன்றாக வெளியேறிவருகிறார்கள். அதேநேரம் பாஜக தனித்து நின்று விளையாடுவதற்கு களமும் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

மெகபூபா,சந்திரபாபு

இதற்கிடையே 2014 முதல் 2019ம் ஆண்டுவரை பாஜக கூட்டணியிலிருந்து மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி), சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) ஆகியவையும் வெளியேறிவிட்டன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை: பாஜக விளாசல்; மாநிலம் முழுவதும் இன்று போராட்டம்

வெளியேற்றம் அதிகரிப்பு

இது தவிர, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பு, ராஜ்பர் தலைமையிலான சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஹனுமான் பெனிவால் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி, போடோ மக்கள் முன்னணி, கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா, கோவா பார்வேர்டு கட்சி, மதிமுக, தேமுதிக ஆகியவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தம் 17 கட்சிகள் இருந்தநிலையில்  அதில் பெரும் மாநிலங்களில் வலுவான வாக்குவங்கியைக் கொண்டிருந்தவை. அந்தக் கட்சிகள் அனைத்தும் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் பாஜகவின் 2024ம் ஆண்டு வெற்றி கானல் நீரா!


 

click me!