பணமோசடி வழக்கு... பாஜக முன்னாள் அமைச்சர் அதிரடி கைது!

By vinoth kumarFirst Published Nov 11, 2018, 4:03 PM IST
Highlights

ரூ.18 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ரூ.18 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் மணிக்கணக்கில் ஏடிஎம் வாசலில் நின்று சொல்ல முடியாத துயரம் அடைந்தனர். ஆனால் ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆம்பிடென்ட் என்ற தனியார் நிதிநிறுவனம், கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியது. இது குறித்து அமலாக்கத்துறையினர் ஆம்பிடென்ட் நிறுவன உரிமையாளர் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும் முடக்கியது.

அப்போது பாஜக அமைச்சராக இருந்த ஜனார்த்தன் அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து பரீத்தை காப்பாற்றுவதற்காக உறுதியளித்தார். இடைத்தரகர் அலிகார் மூலம் மூலம் 57 கிலோ தங்கத்தை பரீத்திடம் முதற்கட்டமாக இருந்து ஜனார்த்தன் ரெட்டி பெற்றார். இது சந்தையின் மதிப்பு சுமார் 18 கோடியாகும். இதனையடுத்து இடைத்தரகர் அலிகாரை கைது செய்தனர். பின்பு தலைமறைவாக இருந்த ஜனார்த்தனை தேடி வந்தனர். 

கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 3 நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தி்ல் விசாரணைக்கு பின்பு ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தனர்.

click me!