கியாஸ் சிலிண்டர் கசிந்து விபத்து... 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

Published : Nov 11, 2018, 12:52 PM IST
கியாஸ் சிலிண்டர் கசிந்து விபத்து... 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

சுருக்கம்

திருப்பதி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதியை அடுத்த ராஜில கண்டிகா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு ரெட்டி விவசாயி. அவரது மனைவி புஜ்ஜியம்மா (26). இவர்களுக்கு பவ்யா (6), நிதின் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தன. நேற்று இரவு கியாயில் உணவு சமைத்து சாப்பிட்டு 4 பேரும் தூங்கினர். ஆனால் கியாஸ் இணைப்பு ஆப் செய்யாமல் இருந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் கியாஸ் பரவியுள்ளது. 

இதனை அறியாத சீனிவாசலு ரெட்டி அதிகாலை 4 மணிக்கு மின்விளக்கை சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீடு முழுவதும் கியாஸ் தீப்பற்றியது. இதனால் வீட்டில் தூங்கிய குழந்தைகள் மற்றும் மனைவி அலறியடித்துக் கொண்டு வெளியே முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

 

அப்போது கியாஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் தீயின் வேகம் அதிகரித்தது. இந்த தீயில் சிக்கிய 4 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"