ஓவர் டார்ச்சர்… தற்கொலை செய்துகொண்ட ஜனார்த்தன ரெட்டியின் கார் டிரைவர்…

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:36 AM IST
ஓவர் டார்ச்சர்… தற்கொலை செய்துகொண்ட ஜனார்த்தன ரெட்டியின் கார் டிரைவர்…

சுருக்கம்

பெங்களுரைச் சேர்த்த தொழிலதிபரும், முன்னாள் கர்நாடக பா.ஜ.க. அமைச்சருமான ஜனார்தன ரெட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அண்மையில் தனது மகளுக்கு 650 கோடி ருபாய் செலவு செய்து மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்தியவர்.

ஏழை,நடுத்தர மக்கள் 500 மற்றும் ஆயிரம் ருபாயை மாற்ற வெயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்க அனைவரின் கடுப்பை சம்பாதித்து மகளின் திருமணத்தை மிகப் பிரமாண்டமாக நடத்தனார்.

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருமணத்துக்குப் பிறகு ஜனார்த்தன ரெட்டி வீட்டில் பின்னர் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது, பணம் மாற்ற முடியாத இந்த நிலையில் இவருக்கு மட்டும் எங்திருந்து இவ்வளவு பணம் வந்த்து என பலரும் ஆச்சரியப்பட்டனர்,

இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் கார் டிரைவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த டிரைவர் எழுதியுள்ள கடித்த்தில் ஜனார்த்தன ரெட்டி 100 கோடி ருபாய் அளவுக்கு கறுப்புப் பணத்தை மாற்றியது தமக்கு தெரியும் என்றும், இதைத் தெரிந்து கொண்ட, ரெட்டி தனக்கு தொர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்,

தொடர் டார்ச்சர் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்த்தாகவும் டிரைவர் அந்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார், ஜனார்த்தன ரெட்டிக்கு கார் டிரைவர் முலம் சிக்கல் எழுந்துள்ளது,

 

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!