ஜம்மு-காஷ்மீர் எல்லையில் நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை –பாதுகாப்பு படை அதிரடி

Asianet News Tamil  
Published : Feb 21, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை –பாதுகாப்பு படை அதிரடி

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராஜொரி மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்ட முயன்ற தீவிரவாதியை, எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-

ராஜொரி மாவட்டம், கேரி பகுதியில் நேற்றுமுன்தின் இரவு எல்லைப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு பட்டு இருந்தனர்.

அப்போது, அப்பகுதியல் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு சிலரின் செயல்பாடுகள் இருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு, பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர்.

இருதரப்புக்கும் ஏறக்குறைய 30 நிமிடங்கள் துப்பாக்கிச்சண்டை நீடித்து, குறைந்தது. இந்நிலையில், நேற்றுகாலை அந்த பகுதியில் பாதுகாப்புபடையினர் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் தீவிரவாதி ஒருவர் இறந்து கிடந்தார்.

அவர் அருகில் ஏ.கே.47 ரக நவீன துப்பாக்கியும், குண்டுகளும், உலர் பழங்கள், பழச்சாறு, இரவில் பார்க்கும் தொலைநோக்கி கருவி(பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது) ஆகியவை கிடந்தன.

இதையடுத்து, இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவ அதிக வாய்ப்புகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன எனத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!