டாடா குழும தலைவராக நடராஜன் சந்திரசேகரன் பதவியேற்றார்…பெரிய பதவியில் அமரும் தமிழர்..
டாடா குழும நிறுவனங்கன் சர்வதேச அளவில் வணிக நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன். இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011ம் ஆண்டு முதல் சைரஸ் மிஸ்த்ரி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக டாடா நிறுவனம் எங்ந விளக்கமும் அளிக்கவில்லை . ஆனால் சைரஸ் மிஸ்த்ரி லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகப் பணிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இதனால் ரத்தன் டாடா போன்றோர் அதிருப்தி அடைந்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன,
சைரஸ் மிஸ்த்ரியை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, ரத்தன் டாடா கடந்த 4 மாதங்களுக்கு செயல்படடு வந்தார்.
இந்நிலையில் டாடா குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து நடராஜன் சந்திரசேகரன் இன்று முறைப்படி டாடா குழும தலைவராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய நடராஜன் டாடா குழுமத்திற்கு வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உழைப்பேன் என தெரிவித்தார்.
1963 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடராஜன் சந்திரசேகரன் பிறந்தார். திருச்சி ஆர்.இ.சி.பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். நாட்டின் முன்னணி தொழிற் குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமரும் தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.