ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published : Jun 16, 2023, 10:53 AM IST
ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில்  5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 5 வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர், மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் எல்ஓசிக்கு அருகிலுள்ள ஜுமாகுண்ட் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் அதிகாலையில் என்கவுன்டர் தொடங்கியது.

காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி), விஜய் குமார் ட்விட்டரில், “ என்கவுண்டரில் வெளிநாட்டை சேர்ந்த ஐந்து  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

1 லட்சம் பேர் இடமாற்றம்.. 950 கிராமத்தில் மின்சாரம் கட்! பைபர்ஜாய் புயலின் ருத்ர தாண்டவம் எப்போது முடியும்.?

மத்திய அமைச்சர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. மோதல்களால் கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!