1 லட்சம் பேர் இடமாற்றம்.. 950 கிராமத்தில் மின்சாரம் கட்! பைபர்ஜாய் புயலின் ருத்ர தாண்டவம் எப்போது முடியும்.?

By Raghupati R  |  First Published Jun 16, 2023, 8:12 AM IST

பைபர்ஜாய் புயலால் 22 பேர் காயம் அடைந்துள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. மேலும் குஜராத்தில் 950 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான பைபோர்ஜாய் புயல் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஜக்காவு துறைமுகம் அருகே, பாகிஸ்தானை ஒட்டி கரையைக் கடந்தது. அப்போது கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது.

சூறைக்காற்றில் தாக்குப் பிடிக்க இயலாமல் மரங்களும், மின் கம்பங்களும் சாலைகளில் விழுந்தன. கடலோரப் பகுதியில் உள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 94 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். புயலின் கண் பகுதியானது 50 கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருந்தது. புயல் கரையை கடந்த சமயத்தில், கட்ச் பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை கொட்டியது.

Tap to resize

Latest Videos

நேற்று குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மரங்கள் பெருமளவில் வேரோடு சாய்ந்ததால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆனால் அது இன்று (16 ஜூன்) அதிகாலையில் வலுவிழக்கத் தொடங்கியது. இன்று அது வடக்கு நோக்கி நகர்ந்தது. வியாழக்கிழமை மாலை குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் 'மிகக் கடுமையான' புயல் கரையைக் கடந்ததால் குறைந்தது 22 பேர் காயமடைந்தனர்.

பைபர்ஜாய் புயல் அதிகாலை 2.30 மணி வரை நலியாவிலிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் புயலாக வலுவிழந்து, அதே மாலையில் தெற்கு ராஜஸ்தானில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

பைபர்ஜாய் புயல் வீசிய பொது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 kmph வரை 140 kmph வரை வீசியது. பலத்த காற்றினால் மின்சார கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் உடைந்ததால், மாலியா தாலுகாவின் 45 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 11 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கடலோர கிராமம் மற்றும் பாலைவன பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்துள்ளன.

Paschim Gujarat Vij Company Ltd. (PGVCL) மற்ற கிராமப்புறங்களுக்கு விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று Morbi இல் உள்ள PGVCL நிர்வாகம் கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் தொலைபேசியில் பேசி, நிலைமையை ஆய்வு செய்தார். கிர் வனப்பகுதியில் சிங்கங்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

குஜராத் நிவாரண ஆணையர் அலோக் சிங் கூறுகையில், 23 விலங்குகள் பலியாகியுள்ளன, 524 மரங்கள் விழுந்துள்ளன, சில இடங்களில் மின்கம்பங்கள் விழுந்துள்ளன. இதனால் 940 கிராமங்களில் மின்சாரம் இல்லை. பைபர்ஜாய் புயல் காரணமாக சுமார் 99 ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது குறுகிய காலத்திற்கு நிறுத்தப்படும் என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சுமார் 1 லட்சம் மக்கள் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து தங்குமிடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் காலநிலை மாற்ற அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், "பாகிஸ்தான் இதுவரை அனுபவித்திராத புயல்" காரணமாக தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து சுமார் 82,000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாகக் கூறினார். சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் கராச்சியில் வெள்ளப்பெருக்கு சாத்தியம் இருப்பதால், புயல் அலைகள் நான்கு மீட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பெண்களை முந்திய ஆண்கள்.. முதல் 50 இடங்களில் 10 மட்டுமே பெண்கள் - நீட் தேர்வு முடிவுகள் என்ன சொல்கிறது?

click me!