
அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள பிபர்ஜாய் புயல் தற்போது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் இடையே கரையை கடக்க தொடங்கி உள்ளது. மிக தீவிர புயலாக உள்ள இந்த புயல் இன்று நள்ளிரவு வரை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபர்ஜோய் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக குஜராத் மற்றும் மும்பையில் கனமழை பெய்தது. மேலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை மைய இயக்குனர் ராதே ஷியாம் சர்மா இதுகுறித்து பேசிய போது “ தற்போது பிபர்ஜோய் புயல் தற்போது கடுமையான புயல் வகையின் கீழ் உள்ளது. புதன்கிழமை அதன் இயக்கம் வடகிழக்கு திசையில் இருந்தது. இது ஜூன் 15 ஆம் தேதி சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் குஜராத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூன் 16 ஆம் தேதி ராஜஸ்தானின் கட்ச் பகுதியில் மேலும் வலுவிழக்கும்.” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதன் முக்கியத்துவம் என்ன? அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதிகள் கருத்து
குஜராத் மாநிலத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடக்க தொடங்கி உள்ள நிலையில் முதல்வர் பூபேந்திர படேல் இன்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். பிபர்ஜோய் புயலின் தாக்கத்தால், இன்று மாலை குஜராத்தில் உள்ள மோர்பி, துவாரகா, ஜாம்நகர் மற்றும் பிற மாவட்டங்களில் மோர்பி, துவாரகா, ஜாம்நகர் மற்றும் பிற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் புயல் காரணமாக குஜராத்தில் உள்ள பழமையான துவாரகதீஷ் கோவில் பார்வையாளர்களுக்காக வியாழக்கிழமை மூடப்பட்டது.
இதனிடையே பிபர்ஜோய் புயலை சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள் “ வடக்கு குஜராத் பகுதியில் கனமழையுடன், மணிக்கு சுமார் 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கிறோம். கடற்படை குஜராத் பகுதியில் உள்ள நிலையங்கள்..., 25க்கும் மேற்பட்ட சிறப்புக் குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளன. இந்த குழுக்கள் பல்வேறு மருத்துவ நிபுணர்கள், நல்ல நீச்சல் வீரர்கள் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
பிபர்ஜோய் புயல் கரையை கடந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மொபைல் சேவை பெயர்வுத்திறனை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. சேவை இல்லாவிட்டால் அல்லது சந்தா பெற்ற நெட்வொர்க்கில் தற்காலிக இடையூறு ஏற்பட்டால், பயனர்கள் வேறு எந்த டெலிகாம் ஆபரேட்டருக்கும் மேனுவலாக மாற்றிக்கொள்ளலாம்.