"தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும்.. உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியாது.." முழங்கிய மார்கண்டேய கட்ஜு

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
"தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும்.. உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியாது.." முழங்கிய மார்கண்டேய கட்ஜு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக  தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம் செல்லுபடியாகும் என்றும் அதனை உச்சநீதி மன்றத்தால் தடுக்க முடியாது என்றும்  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியிருப்பதாவது:

தொலைக்கட்சி  சேனல் விவாதம் ஒன்றை சற்று முன்பு பார்த்ததாகவும்,அதில் பேசியவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டத்தை எப்படி கொண்டு வர முடியும்' என,கேள்வி எழுப்பி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த விஷயத்தில் சட்ட நிலையை பேஸ்புக் மூலம் விளக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சட்டம் அல்லது அவசர சட்டம் இரண்டும் ஒரே மாதியான சட்ட அங்கீகாரம் பெற்றவை தான்.. சட்டசபை அல்லது நாடாளுமன்ற கூட்டம் நடக்காத போது கொண்டு வரப்படுவது தான் அவசர சட்டம்.

இதுதான் இரண்டுக்கும் உள்ள  ஒரே வித்தியாசம்.

நேரடியாக, நீதிமன்ற தீர்ப்பை செல்லாது என்று சொல்லாது. எனினும், ஒரு சட்டம் அல்லது அவசர சட்டம், மூலம் நீதிமன்றம் எந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து முடிவை எடுத்ததோ அந்த சட்டத்தை திருத்தவோ, செல்லாதபடியாக்கவோ முடியும்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக, ஜனாதிபதி பிறப்பிக்க உள்ள அவசர சட்டம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நேரடியாக செல்லாது என்று கூற முடியாது என கட்ஜு தெரிவித்துள்ளார். 

ஆனால், அந்த அவசர சட்டம், விலங்குகள் துன்புறுத்தல் தடை சட்டத்தில் திருத்தம் செய்யும். அதாவது, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கலாம் என அவசர சட்டம் கூறும்.

இதன்படி, உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாது என அவசர சட்டம் சொல்லாது. ஆனால், எந்த சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்ததோ, அந்த சட்டத்தின் அடிப்படையை அவசர சட்டம் மாற்றி விடும் என விளக்கம் அளித்துள்ளார்.

அதன்மூலம், ஜல்லிக்கட்டு விஷயத்தில் அந்த சட்டத்தின் அடிப்படை நீர்த்து போகும்.எனவே தமிழ அரசு பிறப்பித்துள்ள சட்டம் செல்லுபடியாகும் என உறுதியளித்துள்ள மார்கண்டேய கட்ஜு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!