வருமான கணக்குகளை தாக்கல் செய்யாத ‘பீட்டா’ - கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு ‘டிமிக்கி’

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
வருமான கணக்குகளை தாக்கல் செய்யாத ‘பீட்டா’ - கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு ‘டிமிக்கி’

சுருக்கம்

விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மத்திய அரசிடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது.

பீட்டா (People for the ethical treatment of animals-PETA) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது. 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்து இந்தியாவுக்குள் கடந்த 2000ம் ஆண்டில் கால்பதித்தது.

தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் தீர்மானத்துடன், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா அமைப்பு கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. ஏறக்குறைய கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய மதிப்பின்படி ரூ. 2.26 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலவு செய்தது என்பதற்கான கணக்குகளை இன்னும் தாக்கல் செய்யவில்லை.

கடந்த 11-ந்தேதி உச்சநீதிமன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் ஆண்டுக்கு ரூ. 30 லட்சத்துக்கு அதிகமாக நன்கொடை பெறும் நிறுவனங்கள் கண்டிப்பாக வருமான கணக்குகளை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், விலங்குகள் நலவாரியம் என்று சொல்லிக்கொள்ளும் பீட்டா கடந்த 3 ஆண்டுகளாக வரி, வருமானம் விவரங்களை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யாமல் அரசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறது.

ஜல்லிக்கட்டு விசயத்தில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடந்தால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று மிகவும் அதிகாரத்துடன் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியது.

அதுமட்டுமல்லாமல், பீட்டா தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா, விடுத்த அறிக்கையில், ஜல்லிக்கட்டு விசயத்தில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசு வெல்ல முடியாது என்றார் கருத்து பதிவிட்டார்.

ஒரு வழக்கின் தீர்வு வரும்முன்னே எப்படி ஒருவர் தங்களை வெல்லமுடியாது என்று தீர்க்கமாக கருத்துக் கூற முடியும்?, இது நாட்டின் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குள் தலையீடு அல்லவா?, ஒருநாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு , வரிசெலுத்தாத, வெளிநாட்டு தொண்டு நிறுவனத்துக்கு யார் அதிகாரம் யார் அளித்தது? இது நாட்டின் இறையான்மைக்கு விடுக்கும் சவாலாகவும், வெட்கக்கேடாகவும் அல்லவா இருக்கிறது?, பொருளாதார ரீதியாக இந்த அமைப்பிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோமா?. இதற்கு பிரதமர் மோடிதான் பதில் அளிக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

திருப்பதி லட்டு விற்பனையில் சாதனை! டேஸ்டை கூட்டியதால் ஒரே ஆண்டில் 13.5 கோடி லட்டுகள் விற்பனை!
அமேசான் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! H-1B விசா வரும் வரை இந்தியாவில் இருந்தே வேலை செய்யலாம்!