ஜல்லிக்கட்டு நடக்கும்; நேரில் வந்து பார்ப்பேன் - மார்க்கண்டேய கட்ஜூ உற்சாகம்

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஜல்லிக்கட்டு நடக்கும்; நேரில் வந்து பார்ப்பேன் -  மார்க்கண்டேய கட்ஜூ உற்சாகம்

சுருக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கும், வாய்ப்பு இருந்தால் நான் வந்து பார்ப்பேன் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

3ஆண்டுகளாக

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 3 ஆண்டாக நீடிக்கிறது. இதை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து 3 நாட்களாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்தே, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தார். அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும், அதனால் அரசியலமைப்பு சட்டச்சிக்கல் ஏதும் வராது என வலியுறுத்தி வந்தார்.

அதற்கு ஏற்றார்போல், மாநில அரசும் அவசரச்சட்டத்துக்கான முன்வரைவுகளை உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பியது. மத்தியஉள்துறைஅமைச்சகம், அதை குடியரசுதலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பியுள்ளது. ஆதலால், நாளைக்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கப்போட்டியை நடத்த கடந்த 4 நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள், மாணவர்களுக்கு இந்த செய்தி பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, ஜல்லிக்கட்டு குறித்து டுவிட்டரில் வெளியிட்ட உற்சாகமான கருத்தில், “ அடுத்த சில நாட்களில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துவிடும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க இருக்கிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால், அங்கு வர விரும்புகிறேன், அதை பார்க்க ஆசைப்படுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Grok AI வச்சு இப்படியா பண்ணுவீங்க? எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு விதித்த 72 மணி நேர கெடு!
பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!