ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  சத்குரு - கிரிக்கெட் விளையாட்டு தான் ஆபத்து தடை செய்ய முடியுமா?

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 09:16 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  சத்குரு  - கிரிக்கெட் விளையாட்டு தான் ஆபத்து தடை செய்ய முடியுமா?

சுருக்கம்

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன் எழுச்சியாக போராட்டம் நடத்திய வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ஆன்மீக குரு சத்குரு ஜகிவாசுதேவ் குரல் கொடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்று கூறிபீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகளாக போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில், 3 ஆண்டாக இந்த ஆண்டும் போட்டி நடைபெறவில்லை.

இதைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்கும் வகையில் அவசரச்சட்டத்தை மத்தியஅரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் தன் எழுச்சியாக கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனரும்,ஆன்மீக குருவுமான சத்குருஜகிவாசுசதேவ் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதனுக்கும், அவனுக்கு உழைக்கும் காளைக்கும் இடையிலான உறவு உறவு,  கூட்டுழைப்பின் வௌிப்பாடு தான் ஜல்லிக்கட்டு. இது விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல், ஒரு காளையின் ஆண்மையையும் வீரியத்தையும் கண்டுபிடிக்கும் விசயமாக இருந்து வருகிறது.

இதை மனிதர்களுக்கும், காளைகளுக்கும் இடையிலான சண்டையாக  இதை பார்க்கக்கூடாது. கொண்டாட்ட சூழலில், பண்டிகையின் உற்சாகத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டாகும். இது முழுக்க முழுக்க மாடுகளுக்கு அர்ப்பணிக்கும் ஒரு திருநாளில் கொண்டாடப்படுகிறது.  அதனால், நாட்டில் பல மாநிலங்களில் மகரசங்கராந்தி என்றும், தமிழகத்தில் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. 

விவசாயிகள், வேளாண் தொழிலை கொண்டு இருப்பவர்களுக்கும் மாடுகள் என்பது அவர்களின் நண்பர்கள், கூட்டாளிகள். இது 5 ஆயிரம் ஆண்டுகளாக அவர்களுக்குள் இருக்கும் பின்னிப்பிணைந்த உறவு. 

விவசாயிகளின் ஜல்லிக்கட்டு உரிமையை, திடீரென ஒரு உத்தரவு மூலம் நீதிமன்றம் எடுத்துக் கொண்டு விட்டது.  இது காளைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான சண்டை கிடையாது. இதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை. 

இளைஞர்கள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசு கால்பந்து மைதானம், குத்துச் சண்டைக்கான அரங்குகள்,  கிரிக்கெட் மைதானங்கள் என அமைத்து அவர்களை விளையாடத் தூண்டுகிறது. அதுபோலத்தான்ஜல்லிக்கட்டு விளையாட்டும் இளைஞர்களை தவறான பாதையில் செல்லாமல் தடுக்கிறது. இளைஞர்களிடம் இருந்து அனைத்து துணிச்சல், வீரத்தையும் எடுக்க நினைத்தால், அவர்களை குளிர்பதன கிடங்கில்தான் அடைக்கவேண்டும்.

இந்தியாவில் 120 வகையான மாடுகள் இருந்தன. ஆனால், இப்போது 37 வகையான மாடுகள் மட்டுமே இருக்கின்றன. எந்த கிராமங்களில் மாடுகளை கொல்வதில்லை. நீங்கள் ஜல்லிக்கட்டை தடை செய்யும் போதுதான் அவைகள் அடிமாட்டுக்குத்தான் அனுப்பப்படும்.  இது மாடுகளுடன் விளையாடுவதைக் காட்டிலும் அவற்றைக் கொல்வது கொடுமையானது அல்லவா?

இன்று கிரிக்கெட் கூட மக்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து விட்டது. அந்த விளையாட்டிலும் ஆபத்து இருக்கிறது. அந்த விளையாட்டிலும் பந்துகள் தாக்கி பலர் இறந்து இருக்கிறார்கள். ஆதலால், ஜல்லிக்கட்டை தடை செய்தால், கிரிக்கெட்டையும் தடை செய்ய வேண்டும். கிரிக்கெட்டை தடை செய்தாலும், அனைவரும் வீதிக்கு வந்து போராடத்தான் செய்வார்கள். கிரிக்கெட் எப்படி ஒரு மதமாக பார்க்கப்படுகிறதோ, அதுபோலத் தான் ஜல்லிக்கட்டும் இங்கு தமிழர்களின் உணர்வுரீதியாக பார்க்கப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Grok AI வச்சு இப்படியா பண்ணுவீங்க? எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு விதித்த 72 மணி நேர கெடு!
பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!