
கருப்பு பணத்தை மாற்றுவதற்காக தெரிந்தவர்கள் கொடுக்கும், பணத்தை ஜன் தன் வங்கிக்கணக்கில், வீட்டில் இருக்கும் குடும்ப பெண்கள் செலுத்தினால், வருமான வரித்துறை நோட்டீஸ், விசாரணை, அபராதம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர்
வங்கியில் குறைந்தபட்ச இருப்பு இல்லாத ஜன்தன் கணக்குகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் குடும்ப தலைவிகள்,கைவினைக் கலைஞர்கள், உள்ளிட்ட ஏராளமான மக்கள் இதில் கணக்குகள் தொடங்கினார்கள்.
இந்தவங்கி கணக்குகளில் சமையல் எரிவாயு மானியம் தனியாக போடப்பட்டு வருகிறது. இது தவிர வேறு பயன்பாட்டுக்கு பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்தாததால் வங்கி கணக்குகளில் பணம் இருப்பு இல்லாமல் இருந்தது.
இந்தநிலையில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து இந்த வங்கி கணக்குகளில் இப்போது அதிகளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது, டெபாசிட்டும்செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான 2 நாளில் மட்டும் ரூ.170 கோடி பணம் ஜன் தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பணம்வைத்திருப்போர் ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கியோரை அணுகி அவர்கள் மூலம் தங்களது பணத்தை அவர்கள் கணக்கில் செலுத்தி, வெள்ளையாக மாற்றுவது தெரிய வந்தது. இதை கவனித்த வங்கி அதிகாரிகள் இது பற்றி மத்திய நிதி அமைச்சகத்துக்கும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்துமத்திய நிதி அமைச்சகம் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் “கருப்பு பணம் வைத்திருப்போர், அதை வெள்ளையாக மாற்றுவதற்காக ஜன்தன் யோஜனா உள்ளிட்ட பல்வேறு வங்கி கணக்குகள் வைத்திருப்போரை அணுகி அவர்களுக்கு பணப் பயன்கள், வெகுமதி அளிப்பதாகக் கூறி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக தகவல்கள் வருகின்றன.
இதுபோல் தவறாக பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் அவர்கள் மீது வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். மேலும், அபராதம், விசாரணை, வரி ஆகியவையும் இருக்கும்.
குறிப்பாக குடும்பப்பெண்கள், கைவினைகலைஞர்கள் மற்றவர்கள் பணத்தை தங்கள் கணக்கில் போடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவம்பர் 9-ந்தேதியில் இருந்து, டிசம்பர் 30-ந்தேதி வரை அனைத்து வங்கிக்கணக்குகளும் தீவிரமாக கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தமுறையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற புதிய நண்பர்கள் யாரையும் வாடிக்கையாளர்கள் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.