
சென்னையில் பணத்தட்டுப்பாடு இல்லை என்றால் ஏன் சாதாரண மக்களை பணம் எடுக்க அனுமதிக்கவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில் பணத்தட்டுப்பாடு இல்லை என்றால் இன்று வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்யப்படாதது ஏன் என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் ஏன் இன்னும் செயல்படவில்லை எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வங்கி கணக்கில் இருந்து பொதுமக்கள் பணத்தை எடுக்க ஏன் அனுமதிக்கவில்லை என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் ஏன் மக்களை துன்பப்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.