டெல்லி வங்கிகளில் அருண்ஜேட்லி நேரில் ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
டெல்லி வங்கிகளில் அருண்ஜேட்லி நேரில் ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்

சுருக்கம்

பணம் மாற்றுவதில் பொது மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை கேட்பதற்காக டெல்லியில் உள்ள வங்கியில் பொதுமக்களிடம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேரில் விசாரித்தார்.

கடந்த 9ம் தேதி இரவு, 500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதனால், நாட்டு மக்கள் பெரும் துன்பத்துக்கு  ஆளானார்கள். இந்த அறிவிப்பு வெளியான ஒவ்வொரு நாளுமே 4000 மட்டுமே மாற்ற முடியும், 4500 மட்டுமே மாற்ற முடியும், விரலில் மை, இரண்டாயிரம் மட்டுமே மாற்ற முடியும் என்ற தொடர் அறிவிப்புகளால் நாட்டு மக்கள் பெரும் குழப்பத்திலும், மத்திய அரசின் மேல் பெரிய அதிருப்தியிலும் உள்ளனர்.

இந்நிலையில்  டெல்லியில் உள்ள வங்கியில்,  பணம் மாற்றுவதில் உள்ள சிக்கல் குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களிடமும், ஊழியர்களிடமும் குறைகளை கேட்டார்.  மேலும், நாட்டு மக்களுக்கு இதன் பலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பா.ஜ.க., எம்.பி க்கள் மக்களிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!