
கொசு உருவாகும் விதத்தில் சுற்றுப்புறத்தை வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார்.
பெரும்பாலான நோய்கள் பரவுவதற்குக் காரணம் கொசுக்கள் தான். நோய் பரப்பும் முக்கிய காரணியான கொசுக்கள், தூய்மையின்மையால் உருவாகின்றன.
எனவே கொசுக்களை உற்பத்தி செய்பவர்களை தண்டிக்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு சுற்றுப்புறத்தை வைத்திருப்பவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான ஒரு மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் சுற்றுப்புறத்தை மக்கள் பராமரிப்பார்கள் என ஆந்திர அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்படியொரு நடவடிக்கை தமிழ்நாட்டில் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. எடுத்தால் நல்லாத்தான் இருக்கும்..