ஜஹாங்கிர்புரி இடிபாடுகளில் இருந்து சில்லறை எடுக்கும் சிறுவன்... வைரலாகும் புகைப்படம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 21, 2022, 02:38 PM ISTUpdated : Apr 21, 2022, 02:44 PM IST
ஜஹாங்கிர்புரி இடிபாடுகளில் இருந்து சில்லறை எடுக்கும் சிறுவன்... வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறியது.

டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட முன்முறையை தொடர்ந்து, அங்குள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டு  இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகள் துவங்கின. சில மணி நேரங்களில் பல ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

சில்லறை:

இந்த நிலையில், ஜஹாங்கீர்புரி பகுதியில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிறுவன் கீழே உட்கார்ந்த படி, அங்கு சிதறி கிடந்த காயின்களை ஒவ்வொன்று எடுத்து சேகரித்தான். இந்த சம்பவம் முழுக்க புகைப்படம் மற்றும் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. காயின்களை சேகரிக்கும் சிறுவனின் பெயர் ஆசிஃப் என தெரியவந்துள்ளது. 

சிறுவனின் தந்தை நடத்தி வந்த கடை இடிக்கப்பட்டதை அடுத்து கீழே இருந்த காயின்களை சிறுவன் எடுத்துள்ளான். மேலும் அந்த சிறுவன் ஜஹாங்கீர்புரி பகுதியிலேயே வசித்து வருவதும், நேற்று மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கையில் சிறுவன் வசித்து வந்த வீடும் இடிக்கப்பட்டு இருக்கிறது. 

வன்முறை:

ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. வன்முறையில் கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களும் அரங்கேறின. வன்முறையை தடுக்க முயன்ற காவல் துறையினரும்  தாக்கப்பட்டனர். 

வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டு இருந்தார். இதை அடுத்து வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளி உள்பட மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைதானவர்களில் ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடும் களேபரங்களை தொடர்ந்து ஜஹாங்கீர்புரி பகுதி முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதை அடுத்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாகவே ஜஹாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?
சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி