இந்தியாவின் 14வது குடியரசு துணைத்தலைவர் ஆனார் ஜெகதீப் தன்கர் !!

By Raghupati R  |  First Published Aug 6, 2022, 8:45 PM IST

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.


இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த மாதம் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலமும் முடிவடைய இருப்பதால் 14 வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Tap to resize

Latest Videos

கடந்த ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டார். 

மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் சொல்லிவிட்டார்.. வேறு வழியில்லை என்று செய்கிறார்கள்” முதல்வர் ஸ்டாலினை சீண்டிய வானதி !

இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.  15 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகளை, மக்களவை பொதுச்செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்தார். விரைவில் துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்க உள்ளார்.அவருக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!