மோடி, நாயுடுவிடம் டோட்டல் சரண்டர்.. ஜெகன் மோகனை விளாசித் தள்ளிய மாணிக்கம் தாக்கூர்!

Published : Sep 09, 2025, 04:50 PM IST
Manickam Tagore slams Jagan Mohan Reddy

சுருக்கம்

துணை குடியரசு தலைவர் தேர்தலில் என்டிஏ வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை காங். எம்.பி. மாணிக்கம் தாக்கூர் விமர்சித்துள்ளது. ஜனநாயக சக்திகளுக்கு எதிராக ஜெகன் சரணடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜகன் மோகன் ரெட்டியை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கடுமையாக சாடினார்.

மக்கள் நம்பிக்கை மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக, மோடி மற்றும் நாயுடுவிடம் ஜெகன் மோகன் ரெட்டி சரணடைந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாணிக்கம் தாக்கூரின் கடுமையான விமர்சனம்

இது குறித்து தனது சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மாணிக்கம் தாக்கூர், "வரலாறு ஜெகன் மோகன் ரெட்டியின் துரோகத்தை மறக்காது. துணை குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், ஆந்திர மக்களின் நலன்களை புறந்தள்ளி இருக்கிறார். தன் மீது உள்ள சிபிஐ வழக்குகளுக்கு பயந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது ஒரு அரசியல் தந்திரம் அல்ல. இது மோடி - சந்திரபாபு நாயுடுவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, சரணடைவதாகும். இது ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது" என்று தெரிவித்தார்.

 

 

“ஜகன் மோகன் ரெட்டியின் இந்த சமரசம், மக்களின் ஆணையை விட தனது தனிப்பட்ட பிழைப்பை முதன்மைப்படுத்திய நாள் என நினைவுகூரப்படும். ஆந்திராவுக்காக துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் அவர் கோழைத்தனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தலைவர்கள் பயந்து டெல்லிக்கு தலைவணங்கும் போது, தங்களை நம்பிய மக்களுக்கு அவர்கள் துரோகம் செய்கிறார்கள். ஜெகன் சிபிஐ நீதிமன்றங்களில் இருந்து தப்பிக்க தனது முதுகெலும்பை விற்ற அரசியல்வாதியாகத்தான் நினைவுகூரப்படுவார், ஒரு போராளியாக அல்ல” என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நிலவரம்

15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக ஜூலை 21 அன்று பதவி விலகியதையடுத்து, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!