மருத்துவமனை ஊழியர்கள் குளறுபடியால் மாறிய குழந்தைகள்...!! 5 மாதங்களில் 2 அம்மா...!!!

 
Published : Oct 28, 2016, 12:12 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
மருத்துவமனை ஊழியர்கள் குளறுபடியால் மாறிய குழந்தைகள்...!! 5 மாதங்களில் 2 அம்மா...!!!

சுருக்கம்

இமாச்சல பிரதேசம் மாநிலம், சிம்லாவில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக ஷீத்தல் தாகூர் மற்றும் அஞ்சனா தாகூர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த இருவருக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்களோ, இருவரின் குழந்தைகளையும் மாற்றி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, ஷீத்தல் தாகூர், இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மருத்துவமனை அலட்சியம் காரணமாக தங்களுக்கு பிறந்த குழந்தைகள் குறித்து உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு குழந்தைகளின் உரியவரை அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த குழந்தைகளின் உண்மையான அம்மாவிடம் சேர்த்து வைக்கப்பட்டது. இதனால் அந்த இரண்டு தாய்மார்களும் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

மருத்துவமனை ஊழியர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தங்களின் உண்மையான அம்மாவிடம் குழந்தைகள் சென்றதை அடுத்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தயுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!