
திரைப்படங்களில் வருவது போல, பண மழை பொழிந்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பெங்களூர் கே.ஆர் புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை (ரூ. 10 நோட்டுகள்) கொட்டுவது போல் தெரிகிறது. மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் பணத்தைப் பிடிக்க மக்கள் திரண்டுள்ளனர்.
பரபரப்பான மார்க்கெட் பகுதியான அதில், அவ்வழியில் சென்ற இருந்த மக்கள் மீதும் பணத்தை வீசி மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினார் அந்த நபர். நகரின் டவுன்ஹாலுக்கு அருகில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில், மேம்பாலத்திற்கு கீழே கணிசமான கூட்டம் கூடியிருந்தது.
இதையும் படிங்க..Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!
சம்பந்தப்பட்ட நபர் வினோதமாக, கழுத்தில் சுவர்க் கடிகாரத்தையும் கழுத்தில் அணிந்திருந்தார். மேம்பாலத்தில் இருந்து பணத்தை அவர் தூக்கி எறியத் தொடங்கியவுடன் மக்கள் அவரைச் சுற்றி வளைத்தனர். ரூபாய் 10 மதிப்புடைய கரன்சி நோட்டுகள் இருந்தன. 3,000 மதிப்புள்ள நோட்டுகளை அவர் வீசியதாக, சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
அந்த நபர் யார், எதற்காக பணத்தை அள்ளி வீசினார் என்பதும் தெரியவில்லை. போலீஸ் குழு அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க..பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!
இதையும் படிங்க..அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு