கடந்த ஆண்டு டிசம்பரில் பாரிஸ் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணி ஒருவர் நடந்து கொண்ட சம்பங்களை உடனடியாக தெரிவிக்காமல் இருந்தமைக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10லட்சம் அபராதமாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ)விதித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் பாரிஸ் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணி ஒருவர் நடந்து கொண்ட சம்பங்களை உடனடியாக தெரிவிக்காமல் இருந்தமைக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10லட்சம் அபராதமாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ)விதித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்குள் 2வது முறையாக பயணிகளின் மோசமான நடத்தைக்காக, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2019 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக பற்றிய திக்விஜய் சிங் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2022, டிசம்பர் 6ம் தேதி பாரிஸ் நகரிலிருந்து புதுடெல்லி சென்ற ஏஐ-142 என்ற விமானத்தில், பயணி ஒருவர் தவறாக நடந்துள்ளார். இந்த சம்பவம் இந்த மாதம்தான் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
குடிபோதையில் இருந்த பயணி, கழிவறையில் சிகரெட் புகைத்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார், ஊழியர்களின் வார்த்தையையும் மீறியுள்ளார். மற்றொரு பயணி, கழிவறைக்குச் சென்றபோது சக பெண் பயணியின் காலி இருக்கை மற்றும் போர்வையின் மீது தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களை உடனடியாக டிஜிசிஏவுக்கு தெரியப்படுத்தாமல் தாமதம் செய்தமைக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இது டிஜிசிஏவின் விதிகளை அப்பட்டமாக மீறியதாகும்” எனத் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் இணைந்த நடிகை ஊர்மிளா,எழுத்தாளர் பெருமாள் முருகன்
இதற்கிடையே, இந்த மாதத் தொடக்கத்தில், ஏர் இந்தியா மேலாளருக்கு அனுப்பிய நோட்டீஸில் ஏன் உங்கள் மீது விதிமுறைகள் மீறலுக்காக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டிருந்தது. இதற்கு ஏர் இந்தியா சார்பில் 23ம் தேதி விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நியூயார்க்-டெல்லி விமானத்தில் மூதாட்டி மீது சகபயணி சிறுநீர்கழி்த்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டிருந்தது. மேலும் ஏர்இந்தியா இயக்குநருக்கும் ரூ.3லட்சம் அபராதமும் டிஜிசிஏ விதித்தது குறிப்பிடத்தக்கது.