
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் ஒன்றாக இணைந்து நாட்டிலேயே முதல்முறையாக புதிய தொழிற்சங்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
இந்த சங்கத்தில் முழுமையாக வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது.
சமீபத்தில் சாப்ட்வேர் நிறுவனங்களான விப்ரோ, காக்னிசன்ட் ஆகியவை தங்களிடம் பணியாற்றும் 30 ஆயிரம் ஊழியர்களை திறனாய்வு அடிப்படையில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகின.
இதையடுத்து, தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்ற தகவல் நுட்ப தொழிலாளர்களைக் கொண்ட கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து. விரைவில் காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர உள்ளன.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இணைந்து ‘தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் கூட்டமைப்பு’ (எப்.ஐ.டி.இ.) உருவாக்க முடிவு செய்துள்ளன. இந்த அமைப்பின் துணைத்தலைவர் வசுமதி கூறுகையில், “ தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் கூட்டமைப்பை முறைப்படி நாங்கள் பதிவு செய்து இருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தால், நாட்டின் முதல் ஐ.டி. ஊழியர்கள் சங்கமாக இருக்கும்.
தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக பணிநீக்கப்படும் ஊழியர்களுக்கு ஆதரவாக எங்கள் அமைப்பு செயல்படும். இன்னும் 5 மாதங்களில் மிகப்பெரிய வேலையிழப்பு காத்திருக்கிறது.
இந்த அமைப்பில் ஆன்-லைனில் ஆயிரம் உறுப்பினர்களும், 100 உறுப்பினர்கள் செயல்பாட்டிலும் உள்ளனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் இந்த சங்கம் தீவிரமாகச் செயல்படும்
மென்பொருள் நிறுவனங்கள் லாபநோக்கில் செயல்பட்டு, தங்களின் மதிப்பீட்டு திறனை தவறாகப்பயன்படுத்தி, மோசமான செயல்பாடு என்ற முத்திரை குத்தி ஊழியர்களை நீக்குகிறது. வேலைநீக்கம் எந்பது நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் அதேசமயம், நிறுவனத்துக்கு அவப்பெயரை உண்டு செய்யும்.’’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஹெட் ஹன்டர்ஸ் என்ற மனித வளநிறவனத்தின் அறிக்கையில், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.75 லட்சம் முதல் 2 லட்சம் வரை தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்திக்க உள்ளனர். புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை தயார் செய்யவில்லை என்பதால் அவர்கள்வேலை இழப்பார்கள். மெக்கின்சி அன்ட் கம்ெபனியும் இதை கருத்தை வலியுறுத்துகிறது குறிப்பிடத்தக்கது.