மீண்டும் இந்தியாவிடம் வாலாட்டும் ஜி ஜின்பிங்... அடி வாங்காம போக மாட்டா போல சீனாக்காரன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2022, 7:22 PM IST
Highlights

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்திய எல்லைக் கோடு பகுதியை ஒட்டி சீனா நெடுஞ்சாலை அமைக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்திய எல்லைக் கோடு பகுதியை ஒட்டி சீனா நெடுஞ்சாலை அமைக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மேலும் இரு நாட்டுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கண்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து சீனா ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதற்குப் போட்டியாக உள்ள  இந்தியாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு சாதிகளின் சீனா ஈடுபட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் பரம்பரை எதிரியான பாகிஸ்தானுடன் கைகோர்த்துக்கொண்டு சீனா இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. கடந்த 2020 ஜூலை 15ஆம் தேதி லடாக்கில் உள்ள  கல்வான் பள்ளத்தாக்கில் திடீரென சீன படையினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அதை தடுத்ததில் இந்திய ராணுவ வீரர்கள் சீன படையினர் இடையே கடுமையான மோதல் வெடித்தது.

இருதரப்பு வீரர்களும் கடுமையான ஆயுதங்களால் மோதிக்கொண்டனர் அதில்,  இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை அடுத்து இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் சீனப் படையினர் பின்வாங்கினர், 

இதையும் படியுங்கள்: உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ. 600 கோடி தானமாக கொடுத்தது இவர்தான்!!

இந்தியா தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர், ஆனால் தங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்பை சீனா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை, ஆனால் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் உளவு அமைப்புகள் சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் படைகளை குவித்ததால் இந்திய சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டது.

மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் பிரச்சனையை தீர்க்க முடிவு எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்திய எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெறவும் சீன ஒப்புக்கொண்டது, 

இதையும் படியுங்கள்:  2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி

இந்தியாவும் படைகளை திரும்ப பெற்றன, ஆனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இரு நாட்டு எல்லையில் மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் எல்லை கோடு பகுதியை ஒட்டி சீனா புதிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அது சாலையை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது, ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற  செய்தித்தாள் இத்தகவலை வெளியிட்டுள்ளது, திபெத்தின் லுஞ்ச் கவுண்டியிலிருந்து சின்ஜியாங் பகுதியிலுள்ள காஷ்கரில்  உள்ள மஜா வரை இந்த சாலை செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

லுஞ்ச் மாவட்டம்  இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், ஆனால் இது தனது கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு தீபத்தில் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து இந்தியாவிடம் வாதிட்டு வருகிறது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி சீனாவின் இந்த புதிய நெடுஞ்சாலை புதிய தேசிய திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதில் 345 கட்டுமான திட்டங்கள் அடங்குவதாகவும், 2035 ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் மோட்டார் பாதைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும்,

இந்த உட்கட்டுமானத்தில் முதலீடு செய்வதன் மூலம் சீனா தனது  பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட முடியுமென நம்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் G695 என அழைக்கப்படும் நெடுஞ்சாலை,  இந்திய எல்லைக் கோட்டுக்கு வடக்கே அமைந்துள்ள கோனா கவுண்டி வழியாக செல்ல வாய்ப்புள்ளது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கம்பா கவுண்டி சிக்கிம் மாநிலத்தின் எல்லையாக உள்ளது மற்றும் ஜீரோங்  கவுண்டி நேபாள மாநிலத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. தற்போது சீனா திட்டமிட்டுள்ள இந்த சாலை திபெத் நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைந்துள்ள புராங் கவுண்டி வழியாகச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய சாலை வழித்தடம் குறித்த விவரம் மிகத்துல்லியமாக இன்னும் வெளியாகவில்லை, 

ஆனால் இந்திய எல்லையை ஒட்டி டெப்சங்  மைதானம், கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங் போன்ற ஏற்கனவே மோதல் நடந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. ஹாங்காங் ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன, ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் என எந்த ஊடகமும் கூறவில்லை, ஆனால் இந்தியா தனது எல்லையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!