இன்னும் 5 நாள்தான்... ஒரு லட்சம் பேருக்கு வேலை காத்திருக்கு!

 
Published : Jun 25, 2017, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
இன்னும் 5 நாள்தான்...  ஒரு லட்சம் பேருக்கு வேலை காத்திருக்கு!

சுருக்கம்

It is only 5 days to wait Job for one lakh people

நாடு முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், அதன் மூலம் உடனடியாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

தேவை அதிகரிக்கும்

குறிப்பாக பி.காம், எம்.காம் படித்தவர்கள், வரி தொடர்பாக விஷயங்கள் அறிந்தவர்கள், அக்கவுண்டன்சி தெரிந்தவர்கள், சி.ஏ. முடித்தவர்கள், டேட்டா அனாலிசிஸ் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களுக்கு அதிக தேவை ஏற்படும்.

13 சதவீதம்

நாடுமுழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வரும் போது, நாட்டின் வேலைவாய்ப்பு துறை 10 முதல் 13 சதவீதம் வரை வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில், நன்கு திறமைவாய்ந்த, தொழில்முறை கணக்கீட்டாளர்களுக்கு அதிக தேவை ஏற்படும்.

வௌிப்படைத்தன்மை

இது குறித்து இந்தியன் ஸ்டாபிங் பெடரேஷன் அமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்கரவர்த்தி கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்தபின், பொருட்களின் கொள்முதலும், பகிர்தல்,விற்பனையும் வேகமாக இருக்கும். அதிகமானவௌிப்படைத் தன்மை இருக்கும், முறையற்ற வர்த்தகர்களுக்கான ஈர்ப்பு குறைந்து, நாடு சிறப்பான வர்த்தக சூழலுக்கு செல்லும். இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு  உருவாக்கம் 10 முதல் 13 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

ஒரு லட்சம் பேருக்கு வேலை

‘குலோபல் ஹன்ட்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுணில்  கோயல் கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்குவந்த உடன், நாடுமுழுவதும் உடனடியாக ஒரு லட்சம் பேருக்கு முதல் காலிறுதியில் வேலை கிடைக்கும் என கணக்கிட்டுள்ளோம். அதன்பின், சராசரியாக 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சில சிறிய, குறு நிறுவனங்கள் தங்களின் வர்த்தக கணக்குகளை, வௌிப்பணி ஒப்படைப்பு மூலம் செய்ய இருப்பதால், வேலைக்கான ஆட்கள் தேவை அதிகரிக்கும் ஜி.எஸ்.டி. வரி குறித்து அறிந்த தொழில்முறை கணக்கீட்டாளர்களுக்கு அதிக தேவை ஏற்படும்’’ என்றார்.

தாக்கம்

அட்டோமொபைல், சரக்கு போக்குவரத்து, வீட்டு அலங்காரம், இணையதள வர்த்தகம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு,சிமென்ட், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் துறை, மருந்து துறை, தொலைத்தொடர்பு ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி.யின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!