ஐ.டி ஊழியர்களை அலறவைக்கும் ஜி.எஸ்.டி.வரி... இலவச பிக்கப், டிராப், சாப்பாடுக்கு வருகிறது வேட்டு

First Published Mar 29, 2017, 5:07 PM IST
Highlights
IT employees afraid of GST


பன்னாட்டு ஐ.டி நிறுவனங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச பிக்கப், டிராப் வாகன வசதி, இலவச சாப்பாடு அனைத்தும் ஜூலை மாதத்துக்குபின் கிடைப்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அளிக்கும் இதுபோன்ற சலுகைகள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் சென்றால், அல்லது நிறுவயனத்தின் சொத்துக்களை ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தினாலும் அது ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது. 

ஆதலால், ஜூலை மாதத்துக்குபின், இந்த சுலுகைகள் குறித்து ஐ.டி. நிறுவனம், உள்ளிட்ட நிறுவனங்கள் மறு ஆய்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

மேலும், ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிடட்ட நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சலுகைகளும் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரப்பட உள்ளது.

ஜி.எஸ்.டி வரி மசோதா பட்டியல் ஒன்றில் கூறப்பட்டுள்ளபடி, ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 50 ஆயிரத்துக்குள் சலுகைகள், பரிசுகள், பொருட்கள் அளித்து இருந்தால், அது ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படாது. 

அதற்கு மேல் நிறுவனங்கள் மூலம் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சுலுகைகள், பரிசுகள் உள்ளிட்ட விசயங்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படும்.

இது குறித்து கே.பி.எம்.ஜி. இந்தியா நிறுவனத்தின் பொருளாதார ஆலோசகர் சச்சின் மேனன் கூறுகையில், “ ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அளிக்கும்  சலுகை குறிப்பிட்ட தொகைக்கு மேல் சென்றால், அது ஜி.எஸ்.டி. வரிக்குள் வரவாய்ப்புள்ளது. 

குறிப்பாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் இலவச மதிய உணவு, பிக்கப், டிராப் வாகன வசதி, ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்விச்சலுகை, கடன் வசதி ஆகியவை ஜி.எஸ்.டி.வரிக்குள் கொண்டு வரப்படலாம்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், ஊழியர்களை ஊக்கப்படுத்த நிறுவனங்கள் அளிக்கும் சிறப்பு பரிசுகள், விருதுகள், தீபாவளி பரிசுகள், பொங்கல் பரிசுகள் உள்ளிட்டவைகளும் குறிப்பிட்ட தொகையைக் கடந்தால், அதுவும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படலாம். 

click me!