பசு மாடு சுவாசிப்பதும் வெளியிடுவதும் ஆக்சிஜன் தானாம்... சொல்வதெல்லாம் உண்மை என்கிறார் ராஜஸ்தான் அமைச்சர்

First Published Jan 17, 2017, 7:24 PM IST
Highlights
 

பசு மட்டுமே ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறது ஆக்சிஜனை மட்டுமே வெளியிடுகிறது என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர்வசுதேவ் தேவ்நானி சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், தனது கருத்து ஆராய்ச்சி முடிவு அடிப்படையில் அமைந்தது என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஹிகோனியா நகரில்   கடந்த சனிக்கிழமை அகஷய பாத்திர அமைப்பு நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் தேவ்நானி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ பசுமட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகிறது, ஆக்சிஜனை சுவாசிக்கிறது'' எனக் கூறினார். இவரின் கருத்துக்கு சமூக வலைதளங்களிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் விமர்சனம் கிளம்பியது.

இந்நிலையில், தனது கருத்து சரியானது, அது ஆய்வு அடிப்படையில் வெளியானது என அமைச்சர் தேவ்நானி கூறியுள்ளார். 

தேவ்நானிநிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ அக்‌ஷய பாத்திரா அமைப்பு வௌியிட்ட ஒரு ஏட்டில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டு இருந்து, ஆய்வு கட்டுரைகள் வெளியாகும் இணையதளங்களிலும் இதைப் படித்துள்ளேன். பசுமாடு மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகிறது, ஆக்சிஜனை சுவாசிக்கிறது என்ற என்னுடைய கருத்தில் மாற்றமில்லை.

நான் கூறிய செய்திக்கு அறிவியல் ரீதியான முக்கியத்துவம் இருக்கிறது. இது புனிதமான கோமாதாவின் சிறுநீர், சானம் ஆகியவற்றில் ஏராளமான மருத்துவகுணங்கள் உள்ளதை மக்கள் அறிவது அவசியம். இதை தெரிந்தவர்கள் தொடர்ந்து அதை பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பான ஆய்வுகளும் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பசுவின் சான எருவை எரித்தால் சூழ்நிலைக்கு கேடு வராமல் கொசுக்களையும், பூச்சிகளையும் அழிக்கும் கொசு ஒழிப்பானாக பயன்படுத்தலாம்.  என்னுடைய கருத்து அனைத்தும், அறிவியல் ரீதியான ஆய்வுகள், கட்டுரைகள் அடிப்படையில் அமைந்தவை'' எனத் தெரிவித்துள்ளார்.

click me!