பாஸ்போர்ட்களை இழந்த மாணவர்கள்... அவசரகால சான்றிதழ் வழங்க வழிமுறைகள் வெளியீடு!!

Published : Mar 02, 2022, 08:56 PM IST
பாஸ்போர்ட்களை இழந்த மாணவர்கள்... அவசரகால சான்றிதழ் வழங்க வழிமுறைகள் வெளியீடு!!

சுருக்கம்

பாஸ்போர்ட்களை இழந்த மாணவர்களுக்கு அவசரகால சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். 

பாஸ்போர்ட்களை இழந்த மாணவர்களுக்கு அவசரகால சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனை விட்டு வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வெளியுறவுத்துறையின் அறிவுரைகள் வழங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 17,000 இந்தியர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியேறியுள்ளதாக  மதிப்பிட்டுள்ளோம். பாஸ்போர்ட்களை இழந்த மாணவர்களுக்கு  அவசரகால சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பல இந்திய மாணவர்களுக்கும் உதவும். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்கும் பணிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்படும். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்கும் பணிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்படும்.

மேலும் எல்லை நகரங்களில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 விமாங்களில் 3,352 இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைன் எல்லையில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்பது தான் சவாலாக இருக்கிறது. இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்தியர்களை மீட்பது தான் முதல் வேலை, அதே நேரத்தில் மற்ற நாட்டு மக்களுக்கும் உதவி செய்ய தயாராக உள்ளோம்.

ஏதேனும் குறிப்பிட்ட கோரிக்கையை சில நாடுகள் வைத்தால் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிப்போம். இந்தியர்கள் எல்லைக் கடப்பதற்கு வசதியாக லிவிவில் ஒரு தற்காலிக அலுவலகத்தை அமைக்க தூதரகம் (கிய்வில்) முடிவு செய்துள்ளது. கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, நாங்கள் அங்கு செல்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். எங்கள் குழுக்கள் அங்கு செல்ல முடியுமா என்று நாங்கள் ஆலோசனை மேற்கொன்டு வருகிறோம், அது எளிதானது அல்ல என்பது எங்களுக்கு தெரியும். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு இதுவரை 15 விமானங்கள் இந்தியா திரும்பியுள்ளதாகவும் இதுவரை 3,352 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!