குட்டி சந்திரயான் 3 - இந்திய பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கிய தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல்!

By Ansgar R  |  First Published Aug 26, 2023, 8:49 AM IST

இன்று காலை பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி அவர்கள் தற்பொழுது பெங்களூரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து உரையாற்றி வருகிறார். பிரதமருக்கு ISRO தலைவர் சோம்நாத் உற்சாக வரவேற்பு அளித்தார்.


கடந்த ஒரு வார காலமாக தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அதன் பிறகு கிரீஸ் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கும் தனது பணிகளை முடித்த அவர் இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான சந்திக்க நேரடியாக பெங்களூருவிற்கு இன்று காலை சுமார் 6.15 மணி அளவில் திரையரங்கினார். 

அங்கு பெங்களூரு விமான நிலையத்தில் குழுமி இருந்த மக்களையும், பாஜக தொண்டர்களையும் சந்தித்து அவர்கள் முன் பேசிய பிரதமர் மோடி அவர்கள் அடுத்தபடியாக கார் மூலம் பெங்களூருவில் உள்ள ISTRAC மையத்திற்கு சென்றடைந்தார். 

Tap to resize

Latest Videos

வழிநெடுங்கிலும் குழுமியிருந்த மக்கள் மேளதாளங்களோடு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு ISTRAC சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார். 

இதனை அடுத்து நிலவில் சாதனை படைத்த சந்திரயான் 3 மிஷனின் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர்கள் தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 

Touched by the affection of Indian diaspora in Athens. Addressing a community programme. https://t.co/xD7YBdMvG2

— Narendra Modi (@narendramodi)

பின்னர் விஞ்ஞானிகளோடு நின்று அவர் தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார், பிறகு ஒரு குட்டி சந்திரயான் 3 விண்கல நினைவு பரிசை தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல், பிரதமர் மோடிக்கு பரிசளிக்க, ISRO தலைவர் சோமநாத் அவர்களும் மூன்று நினைவு பரிசினை பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கி நன்றி கூறினார். 

தற்பொழுது விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி அவர்கள் பேசி வருகிறார், மேலும் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் தரையிறங்கிய பகுதி இனி சிவசக்தி என்று அழைக்கப்படும் என்று பிரதமர் கூறினார். மேலும் நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் தேதி Indian Space Day என்று அறிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

முதலில் நம் விஞ்ஞானிகளை கண்டு தலைவணங்க விரும்புகிறேன் - பெங்களூருவில் மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி!

click me!