இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் டிசம்பர் 30ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஸ்பெடெக்ஸ் திட்டத்தின் கீழ் ஏவப்படும் இந்த ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் உள்ளன, இவை ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யும்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) ராக்கெட் நாளை, டிசம்பர் 30ஆம் தேதி இரவு விண்ணில் பாய்கிறது. இதனை இஸ்ரோவின் யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணிநேர கவுண்டவுன் இன்று இரவு ஆரம்பிக்கிறது.
ஹோட்டல் அறையில் இறந்த கிடந்த நடிகர்! 2 நாட்களாக உள்ளே நடந்தது என்ன?
ஸ்பெடெக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. விண்ணில் செலுத்தப்படும் பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம்-4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் இருக்கும்.
ஸ்பெடெக்ஸ் திட்டம் பிற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இதில் 14 ஆய்வுக் கருவிகளை இஸ்ரோ தயாரித்தவை. எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை என இஸ்ரோ கூறியுள்ளது.
இந்த ராக்கெட் ஏந்திச் செல்லும் கருவிகள் ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன. குறிப்பாக விண்வெளியின் தாவரங்களை வளர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
ஜனவரி 1 முதல் புதிய UPI விதிகள்! இரட்டிப்பாகும் பணப் பரிவர்த்தனை வரம்பு!