விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 9 செயற்கைக்கோள் - இஸ்ரோவுக்கு மேலும் ஒரு மகுடம்

 
Published : May 05, 2017, 05:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 9 செயற்கைக்கோள் - இஸ்ரோவுக்கு மேலும் ஒரு மகுடம்

சுருக்கம்

ISRO launched a new rocket

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தெற்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்காக உதவும் “ஜி-சாட்” எனும் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான “இஸ்ரோ” இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

நாட்டிபாய் எனப் பெரிடப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட், வெற்றிகரமாக செயற்கைக்கோளை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.

தெற்கு ஆசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் வளர்ச்சி, அவை பலன் பெறும் வகையில்  செயற்கைக்கோள் ஒன்று ஏவப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014ம்ஆண்டு சார்க் மாநாட்டில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தெற்கு ஆசியா செயற்கைக்கோள் என்று பெயருடன் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த செயற்கைக்கோளை தயாரிக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில், விண்ணில் ஏவத் தயாரானது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக் கிழமை ஏவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக 28 மணிநேர கவுண்ட்டவுன் வியாழக்கிழமை நண்பகல் 12.57 மணிக்கு தொடங்கியது.

இதையடுத்து கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், இன்று  மாலை சரியாக 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எப்09 ராக்கெட் மூலம் ஜி-சாட் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இஸ்ரோவின் வெற்றிகரமான பிரிவான ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 11-வது ராக்கெட்டாகும். மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் எஞ்சின் மூலம் ராக்கெட் இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக “எலெக்ட்ரிக் புரபல்சன்” தொழில்நுட்பத்தில் இந்த ராக்கெட் செலுத்தப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட ஜி.சாட் செயற்கைக்கோள், 12 கியு பாண்ட் எந்திரங்களை சுமந்து செல்கிறது. ஒட்டுமொத்தமாக இதன் மதிப்பு ரூ.450 கோடிாயகும், இதில் செயற்கைக்கோளின் மதிப்பு மட்டும் ரூ. 235 கோடியாகும்.  இதன் ஆயுள் காலம் 12 ஆண்டுகள் ஆகும்.

இந்த செயற்கைகோள், தெற்கு ஆசிய நாடுகளின் தகவல் தொடர்பு, பேரிடர் ஆதரவு, கண்காணிப்பு, வானிலை குறித்த அறிவிப்புகள், டி.டி.எச். சேவை, இன்டர்நெட் சேவை, டெலி மெடிசின் உள்ளிட்டவற்றுக்காக பயன்படும்

இந்த செயற்கோள் திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கும் போதே, பாகிஸ்தான் அதில் இருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்தது. இதையடுத்து,இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு மட்டும் பயன்படும்.

PREV
click me!

Recommended Stories

வரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத கௌரவம்.. பிரதமர் மோடியை பெருமைப்படுத்திய எத்தியோப்பியா..
டிசம்பர் 18 முதல்.. பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை.. முழு விபரம் உள்ளே!