ராக்கெட் ஏவுவதை நிறுத்திய இந்தியா...!! இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...!!

Published : Mar 04, 2020, 06:38 PM IST
ராக்கெட் ஏவுவதை நிறுத்திய இந்தியா...!!  இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...!!

சுருக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என,  இஸ்ரோ திடீரென அறிவித்தது. கோளாறு சரி செய்யப்பட்டதும்  விண்ணில் ஏவப்படுவது  குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்  விண்ணில் ஏவப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது . ஜிஎஸ்எல்வி எப்-10  ரக ராக்கெட் பூமியை  கண்காணிக்கும் வகை செயற்கைக்கோள் ஆகும்,  இது நாளை  விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக  இஸ்ரோ அறிவித்துள்ளது . 

இந்தியாவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ பூமியை கண்காணிக்க ஜிசாட்- 1  செயற்கைக்கோளை தயாரித்துள்ளது ,  இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளி இரண்டாவது ஏது தளத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி  எப்-10 என்ற ராக்கெட் மூலம் நாளை மாலை 5:43  மணிக்கு விண்ணில்  ஏவப்பட இருந்தது .  இதற்கான இறுதிகட்ட பணியான கவுண்டன் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது . 

 

அப்போது ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளில் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது , இந்நிலையில் ஜிஎஸ்எல்வி  எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படுவது  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என, இஸ்ரோ திடீரென அறிவித்தது. கோளாறு சரி செய்யப்பட்டதும்  விண்ணில் ஏவப்படுவது  குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது .
 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!