மேற்கு வங்கத்தில் வாழும் வங்கதேசத்தினர் அனைவரும் இந்தியர்கள்தான்..... முதல்வர் மம்தா பானர்ஜி....

By Asianet TamilFirst Published Mar 4, 2020, 2:49 PM IST
Highlights

மேற்கு வங்கத்தில் வாழும் வங்கதேசத்தினர் அனைவரும் இந்தியர்கள்தான் அவர்கள் புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  வேண்டிய அவசியமில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கலியாகன்ஞ்-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: வங்கதேசத்திலிருந்து வந்த அனைவரும் இந்திய குடிமக்கள். அவர்கள் குடியுரிமை பெற்று உள்ளார்கள். நீங்கள் (வங்கதேசத்தினர்) குடியுரிமைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தலில் உங்க வாக்குகளை பதிவு செய்து வருகிறீர்கள்.

பிரதமர் மற்றும் முதல்வரை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் குடிமக்கள் இல்லை என இப்போது அவர்கள் சொல்கிறார்கள். அவர்களை நம்பாதீர்கள். வங்கத்தை விட்டு ஒரு நபரை வெளியேற விடமாட்டோம். இந்த மாநிலத்தில் வாழும் எந்தவொரு அகதிகளின் குடியுரிமையையும் பறிக்கபடாது. இது வங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். வங்கத்தை மற்றொரு டெல்லி அல்லது உத்தர பிரதேசமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேசமயம், வாக்கு வங்கி அரசியலுக்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் மற்றும் சிறுபான்மையினர் நலன்களை இழிவுப்படுத்தி வருகிறார் என பா.ஜ.க. தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. மேலும் அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை அளித்து வருகிறது.

click me!