இஸ்ரோ முன்னாள் தலைவர்  யு.ஆர்.ராவ் காலமானார்… ஆர்யபட்டாவை விண்ணில்  ஏவ முக்கிய பங்கோற்றியவர்…

First Published Jul 24, 2017, 8:51 AM IST
Highlights
ISRO ex chairman U.R.Rao expired


பெங்களூருவில் வசித்து வந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் எனப்படும்  உடுப்பி ராமசந்திரராவ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

விஞ்ஞானியான ராமச்சந்திர ராவ் கர்நாடக மாநிம் உடுப்பி நகரை சேர்ந்தவர் .  இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்றி வந்தார். யு.ஆர்.ராவ் என அறியப்பட்டவரான இவர் , 1984 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருந்தார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா ஏவுவதற்கான பணிகளில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். பெங்களூரில் வசித்து  வந்த ராமச்சந்திர ராவ் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ராமச்சந்திர ராவ், பெங்களூரில் காலமானார். இதுகுறித்து இஸ்ரோவின் செய்தி தொடர்பாளர் தேவிபிரசாத் கர்னிக்  பேசும்போது ,  இன்று அதிகாலை 3மணியளவில் ராமச்சந்திர ராவ் மரணம் அடைந்தார் என தெரிவித்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஏற்கனவே, 1976ல் பத்ம பூஷண் விருதை பெற்ற இவர், மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை இந்த ஆண்டில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

tags
click me!