திருச்சூர் பூரம், கும்பமேளாவில் தாக்குதல் நடத்துவோம் ஐ.எஸ். தீவிரவாதிகள் ‘வாட்ஸ்அப்’ மூலம் மிரட்டல்

First Published Nov 15, 2017, 2:57 PM IST
Highlights
Islamic State warns of Las Vegas like attack on Kumbh Mela Thrissur Pooram in new audio


கேரள மாநிலம், திருச்சூரில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள பூரம் திருவிழா, கும்பமேளாவில்தாக்குதல் நடத்தப்படும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் பெயரில்வாட்ஸ்அப் மூலம் மலையாளத்தில் ஆடியோ வெளியிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் சமீபத்தில் 100 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் கேரள போலீசார் தெரிவித்த நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கேரள போலீசார் அந்த வாட்ஸ்அப் மூலம் பரவிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள்  பெயரில் வலம்வரும் மிரட்டல்ஆடியோவை மத்திய புலனாய்வு பிரிவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். கேரள போலீசாரும் இந்த வாட்ஸ்அப்மிரட்டல் குறித்து தீவிர புலனாய்வு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அந்த ஆடியோவில், “ மதநம்பிக்கையற்ற மக்கள், முஸ்லிம் மதத்துக்கு மாற வேண்டும். அது முடியாவிட்டால் மக்கள், முஸ்லிம் மதத்தை வளர்க்கவும், ஐ.எஸ். அமைப்புக்கும் நிதி உதவி அளிக்க வேண்டும்.

உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உணவில் விஷம் கலப்பது,டிரக், லாரியை பயன்படுத்திதிருச்சூர் பூரம், கும்பமேளாவில்கூடும் மக்கள் கூட்டத்தில் விட்டு ஏற்றுவது போன்ற தாக்குதல்களை செய்ய இருக்கிறோம். உலகம் முழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலைத்தான் நடத்துகிறார்கள்.

சமீபத்தில் எங்களின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ்நகரில், இசை நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியால் சுட்டு ஏராளானவர்களை கொன்றார். உலகில் ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. உண்மையில் கடைசி நபர் இருக்கும்வரை உலகில் போராடுவோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடியோ குறித்து போலீசார் கூறுகையில், “ இந்தவாட்ஸ்அப் ஆடிய சவூதிஅரேபியா பகுதியில் இருந்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில்காசர்கோடு நகரைச் சேர்ந்த அப்துல் ரசீத்  அப்துல்லாஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார். அவரின் குரல் போன்று இருப்பதாக சந்தேகிக்கிறோம். இது குறித்து தீவரமாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ எனத் தெரிவித்தனர். 

அதேசமயம், தேசிய புலனாய்வு பிரிவினர் தரப்பில் கூறுகையில், “ கேரள மாநிலத்தில் மக்களிடத்தில் பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் இந்த ஆடியோவெியிடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ எனத் தெரிவிக்கின்றனர். 

click me!