பிஹாரில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக ஆங்கில செய்தி ஊடகங்கள் தெரிவி்க்கின்றன
பிஹாரில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக ஆங்கில செய்தி ஊடகங்கள் தெரிவி்க்கின்றன
இதனால் விரைவில் பாஜகவுடன் கூட்டணியை விட்டு வெளியேறி, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, இடதுசாரிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிராவில் ஷிண்டேவைத்து சிவேசனா கட்சியை உடைத்து ஆட்சி அமைத்தது போன்று, பிஹாரில் ஆர்சிபி சிங்கை வைத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக ஐக்கியஜனதா தளம் குற்றம்சாட்டுகிறது.
இதற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்தலைவர் நிதிஷ் குமார் நாளை கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை பாட்னாவில் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு 4-வது முறையாக பிஹார் முதல் நிதிஷ் குமார் நேற்றும் பங்கேற்கவில்லை. நிதஷ் குமார் பங்கேற்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது, சமீபத்தில்தான் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருப்பதால் பயணத்தை தவிர்ப்பதாகவும், மாநில அரசு சார்பில் பல நிகழ்ச்சிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் “ பாஜகவுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையிலான உறவு விரிசல் பெரிய அளவுக்கு வந்துவிட்டது. இதனால்தான் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் நிதஷ் பங்கேற்கவில்லை.
விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்
மேலும், ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி அளித்த விருந்து, குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு, மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தையும் நிதிஷ் குமார் புறக்கணித்தார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பிஹாரில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பாஜக தலைவர்கள், நிதிஷ் குமாரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இது பற்றி பாஜக மேலிடம் கண்டு கொள்ளவும் இல்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைத்து, தனித்து ஆட்சி அமைக்கவும் பாஜக திட்டமிட்டதாக புகார்கள் வந்தன.
சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்சிபி சிங்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கட்சித் தலைமை விளக்கம் கேட்டதையடுத்து, அவர் கட்சியிலிருந்து விலகினார். இவரை வைத்து கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக நிதிஷ் குமாருக்கு தகவல்கள் கிடைக்கவே அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவின் 14வது குடியரசு துணைத்தலைவர் ஆனார் ஜெகதீப் தன்கர் !!
இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் இடைத்தேர்தல் வருவதை விரும்பவில்லை. இன்னும் 3 ஆண்டுள் ஆட்சி இருப்பதால், ஆட்சியைத் தொடரவே விரும்புகிறார்கள். இதனால், காங்கிரஸ், இடதுசாரிகள் துணையுடன் மீண்டும் ஆட்சியைத் தொடரவும் நிதிஷ் குமார் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், நிதிஷ் குமார் தொலைப்பேசியில் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் கூறுகையில் “ மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் தேவையில்லை. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதே இதை பாஜகவிடம் தெளிவாகக் கூறிவிட்டோம். எங்கள் கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. சிராஜ் பாஸ்வானை படுத்தியதைப் போல் எங்களையும் பிளவு படுத்த ஆர்சிபி சிங் மூலம் முயல்கிறது.
ஆர்சிபி சிங்கிற்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதை வைத்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பாஜக திட்டமிடுகிறது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆசிபி சிங்கிற்கு நிதிஷ்குமார் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு அமைச்சர் பதவியை வழங்கியது.
அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி சிங்கை மாநிலங்களவைக்கு 3வது முறையாக தேர்ந்தெடுக்காதது குறித்து நிதிஷ் குமார் மீது ஆர்சிபி சிங் அதிருப்தியில் இருந்ததால் அவர் விலகியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதனால், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறவு முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது.