ஜி.எஸ்.டி. சிறந்த வரிப் புரட்சி - பீற்றிக் கொள்ளும் பிரதமர் மோடி...

 
Published : Jul 07, 2017, 09:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஜி.எஸ்.டி. சிறந்த வரிப் புரட்சி - பீற்றிக் கொள்ளும் பிரதமர் மோடி...

சுருக்கம்

Is the best revolution in Indias tax system

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி-20 நாடுகள் அமைப்பின் 12-வது மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்தியாவில் முதன்முறையாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 70 வருடங்களில் இந்தியாவின் வரி விதிப்பு முறையில் ஏற்பட்டுள்ள தலைசிறந்த புரட்சியாகும்.இந்தியாவின் பொருளாதார நிலை 7 சதவீத ஜிடிபி-யுடன் சீரான வளர்ச்சியை அடைந்து வருகிறது. உலக நாடுகளின் பொருளாதார முறைக்கு சவால் விடும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலக பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!