உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த ஆண்டு மே மாதம் ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இது நவம்பர் 2016ல் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை நினைவுபடுத்தியது. இந்த சூழலில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் மக்களவையில், நிதி அமைச்சகம் இது தொடர்பான அச்சங்களை போக்கி விளக்கம் அளித்துள்ளது.
சுப்ரியா சுலே உட்பட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பணமதிப்பு நீக்கம் குறித்த அரசின் நிலைப்பாட்டை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெளிவுபடுத்தினார். "கருப்புப் பணத்தை ஒழிக்க, பிற உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அரசு திட்டமிட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட / எடுக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகள் என்ன " என்று 14 எம்.பி.க்கள்கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த பங்கஜ் சவுத்ரி “ தற்போதைக்கு வேறு எந்த உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டையும் பணமதிப்பிழப்பு செய்ய அரசாங்கம் திட்டமிடவில்லை” என்று தெரிவித்தார். மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். இந்த உயர் மதிப்புடைய கரன்சியை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
மற்ற மதிப்புள்ள நோட்டுகளின் விநியோகத்தை அதிகரிக்கவோ அல்லது ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விடவோ அரசாங்கத்திடம் ஏதேனும் முன்மொழிவு உள்ளதா என்று கேட்டதற்கு, பதிலளித்த பங்கஜ் சவுத்ரி கூறுகையில், "இந்த வாபஸ் என்பது பொதுமக்களுக்கு சிரமம் அல்லது பொருளாதாரத்தில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க திட்டமிடப்பட்ட நாணய மேலாண்மை நடவடிக்கையாகும். மேலும், நடப்பு ஆண்டில் ரூ. பரிமாற்றம்/திரும்பப் பெறுதல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் மற்ற வகைகளில் உள்ள நோட்டுகள் பராமரிக்கப்படுகின்றன." என்று தெரிவித்தார்.
1,000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து (அவை சட்டப்பூர்வமானதாக இருந்தாலும்), இப்போது அதிக மதிப்புள்ள கரன்சி ரூபாய் 500 நோட்டுகளாகும். புதிய ரூபாய் 500 மதிப்பிலான பணமதிப்பு நீக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பகீர்!